பால் ரவா கேசரி

INGREDIENTS

  • ரவை – 1/2 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • பால் – 2 கப்
  • நெய் – 10 மில்லி
  • முந்திரி – 5
  • பாதாம் பருப்பு- 5
  • உலர் திராட்சை – 10
  • ஏலக்காய்த் தூள் – 1 ஸ்பூன்
  • குங்குமப்பூ – சிறிதளவு

INSTRUCTIONS

  1. வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம் பருப்பு, உலர் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  2. வெறும் வாணலியில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து பாலில் குங்குமப்பூவைச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  4. அடுத்து பாலைக் கொதிக்கவைத்து ரவையைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. அடுத்து குங்குமப்பூ- பால் சேர்த்து, சர்க்கரை சேர்த்து நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  6. அடுத்து ஏலக்காய்த் தூள், முந்திரி, பாதாம் பருப்பு, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கவும்.
  7. இப்போது சுவையான பால் ரவா கேசரி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *