விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரபல ஹீரோவுக்கு வில்லனாக நடிக்கிறாரா விக்ரம்?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. ரங்கஸ்தலம் என்ற வெற்றிப் படத்துக்குப் பின்னர் சுகுமார் இயக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் மற்ற படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருந்ததால் இந்தப் படத்திலிருந்து விலகினார்.

இந்நிலையில் அவரது கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்றும் ‘புஷ்பா’ திரைப்படத்தில் விக்ரம் நடிக்கவில்லை என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் தற்போது ‘பொன்னியின் செல்வன்’, கோப்ரா, உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதியன்று அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘புஷ்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. கொரோனா ஊரங்கால் தடைபட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர காடுகளில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும் அடுத்த ஆண்டுக்குள் இத்திரைப்படத்தின் ஷுட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. Netflix | Paava Kadhaigal | நெட்ஃப்ளிக்ஸில் வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனனின் ‘பாவக் கதைகள்’.. டீசர் ரிலீஸ்..

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவு செய்கிறார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *