கணவா றோஸ்ட்

சமைக்க தேவையானவை

  •  கணவா மீன் – 1 கிலோ கிராம்
  •  மஞ்சள்தூள் – 3/4 தேக்கரண்டி
  •  பச்சை மிளகாய் – 5 நறுக்கியது
  •  தேங்காய் – 1/2 கப் (துருவியது)
  •  மல்லித் தூள் – 1 1/2 மேசைக் கரண்டி
  •  இஞ்சி – 1/2 கப் )நறுக்கியது)
  •  கரமசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
  •  நல்ல மிளகு தூள் – 1 1/2 மேசைக் கரண்டி
  •  தக்காளி – 2பெரியது
  •  மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
  •  கறிவேப்பிலை – தேவையான அளவு
  •  பூண்டு – 7பற்கள் உப்பு – – தேவையான அளவு
  •  வெங்காயம் – 2 நறுக்கியது
  •  தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

குறிப்பு

உணவு செய்முறை : கணவா றோஸ்ட்

  • Step 1.முதலில் கணவா மீனை கழுவி அதனை சிறு வளையங்களாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அதனை 1/2தேக்கரண்டி நல்ல மிளகு தூளில் புரட்டி எடுக்கவும்.
  • Step 2.பின்பு அதனுடன் 1/2தேக்கரண்டி மஞ்சள் தூள்,கறி வேப்பிலை பொடித்த இஞ்சி,பூண்டுமற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  • Step 3.பின்னர்ஒரு விசில் வரும் வரை நீர் சேர்க்கக் கூடாது .அதே நேரம் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த்தும் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • Step 4.பின்பு தீயைக் குறைத்து அதனுடன் மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டிநல்ல மிளகு தூள் தானியா தூள்,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • Step 5.நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
  • Step 6.அதனுடன் தேங்காய் துருவல், கரம் மசாலா, வேக வைத்த கணவா மீன் மற்றும் நீர் சேர்த்து குக்கரில் வைத்து 15 நிமிடம் வரை வேக வைத்து இறக்கவும்.பின்பு பரிமாறவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *