மகிழம்பூ முறுக்கு

சமைக்க தேவையானவை

  •  பச்சரிசி (தண்ணீர் விட்டு உலர்த்தியது) – 300 கிராம்
  •  பாசிப்பருப்பு – 100 கிராம்
  •  கடலைப்பருப்பு – 50 கிராம்
  •  எண்ணெய் – கால் கிலோ
  •  பெருங் காயத்தூள் – சிறிதளவு
  •  காய்ச்சிய எண்ணெய் – 2 டீஸ்பூன்
  •  உப்பு – தேவையான அளவு

உணவு செய்முறை : மகிழம்பூ முறுக்கு

  • Step 1.முதலில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, பின்பு ஆறவிட்டு, அதில் அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • Step 2.இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும்.
  • Step 3.அந்த மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். முறுக்கு சிவந்த பின் எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *